கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.
கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும். பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.
வணக்கம், பழன் அறவாரியம் இணையதளத்திற்கு வருக!!!
கல்வி வாய்ப்பு பெற வேண்டும் என ஆர்வத்துடன் இருக்கும் மாணவர்களுக்கு உதவ வேண்டும் எனும் ஒரே நோக்கத்துடன் பழன் அறவாரியம் நிறுவப்பட்டுள்ளது. கல்வியின் வாயிலாக வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற ஒரே நம்பிக்கையை அடித்தளமாக பழன் அறவாரியம் கொண்டுள்ளது. இதன் வழியாக வாழ்க்கை தரத்தைமேம்படுத்த முடியும்எனஆழமாக நம்புகிறோம்.
நிறுவனர் கருத்து
கல்வி தான் வாழ்க்கையின் முதல் அடித்தளம். என் பெற்றோர்களாகிய திரு. ராமநாதன் செட்டியார் மற்றும் திருமதி. சேதுராமாயி ஆச்சி தரமான கல்வி தரமான பள்ளிக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளனர்.







