நிறுவனர் கருத்து
கல்வி தான் வாழ்க்கையின் முதல் அடித்தளம். என் பெற்றோர்களாகிய திரு. ராமநாதன் செட்டியார் மற்றும் திருமதி. சேதுராமாயி ஆச்சி தரமான கல்வி தரமான பள்ளிக்கூடங்கள், நல்ல ஆசிரியர்கள் மற்றும் கல்வியின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்தியுள்ளனர்.
எங்கள் முன்னோர்களின் பூர்விகமான புதுப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டார கிராம புரத்தில் இச்சேவை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.
இவ்விடத்தில் கல்வி தரத்தை மேம்படுத்த பல திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என நாங்கள் ஆவலாக இருக்கின்றோம்.

ப. ராம. பழனியப்பன்
தொழில் முனைவர், கல்வியாளர்.
நிர்வாக இயக்குனர்கள்






